திருட்டுச் சம்பவம்
வவுனியா கோவில்புதுக்குளம் மகாவிஸ்னு ஆலயத்தில் திருட்டு சம்பவம் ஓன்று இன்று பொதுமக்களால் முறியடிக்கபட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்.. குறித்த ஆலயத்தில் நேற்று அதிகாலை 1 மணியளவில் நான்குபேரை கொண்டகுழுவினர் ஆலயத்தின் வாசல் பகுதியூடாக உள்நுளைந்துள்ளனர்.
அதனை அவதானித்த ஆலயத்தின் காவலாளி ஓடிசென்று ஆலயத்தின் மணியை அடித்துள்ளார். இதனால் அருகில் இருந்த பொதுமக்கள் ஆலயத்திற்குள் ஒன்றுகூடியுள்ளனர். இதனால் செய்வதறியாத திருடர்கள் தப்பியோடியுள்ளனர். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலைய குற்றதடுப்பு பிரிவில் ஆலயத்தின் நிர்வாகத்தினரால் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள சிவன் ஆலயத்திலும் அண்மையில் உண்டியல்கள் திருடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







