வவுனியாவில் பொலிஸாரால் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு!!

607

மரக்கடத்தல் முறியடிப்பு

வவுனியா மாமடுவ பகுதியில் நேற்று (26.01) இரவு 10 மணியளவில் சட்டவிரோதமாக முதிரை மரகுற்றிகளை கடத்த முற்பட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா மாமடு பகுதியில் நேற்று (26.01) இரவு 10 மணியளவில் பட்டா ரக வாகனத்தில் முதிரை மரகுற்றிகளை கடத்துவதாக மாமடுவ பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாமடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கெ.செனரத் தலமையிலான பொலிஸாரினால் சேமமடு பகுதியில் வைத்து முதிரை மரக்குற்றிகளை கடத்த பயன்படுத்தப்பட்ட பட்டாரக வாகனத்தினையும், பட்டா ரக வாகனத்தின் சாரதி உட்பட நால்வரை கைது செய்துள்ளனர்.

13 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் நாளை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாக மாமடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.