வவுனியாவில் கோட்டக்கல்வி அதிகாரி எம்.பி.நடராஜாவிற்கு மணிவிழா நிகழ்வு!!

742

எம்.பி.நடராஜாவிற்கு மணிவிழா நிகழ்வு

வவுனியா தெற்கு வலயத்தின் தமிழ் கோட்டக்கல்வி அதிகாரி எம்.பி.நடராஜாவிற்கு மணிவிழா நிகழ்வு இன்று (27.01) வவுனியா தெற்கு வலயத்தின் அதிபர்கள் சங்கத்தின் தலைவர் தே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் பணிப்பாளர் முத்து ராதாகிருஸ்ணனால் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்ட எம்.பி.நடராஜா பாண்ட் வாத்தியங்கள் முழங்க நடைபவனியாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர் சமூகத்தினால், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு அழைத்து வரப்பட்டு ஐயாத்துரை மண்டபத்தில் கௌரவிப்பு நிகழ்வுகள் நடைபெற்றது.

கல்வி சமூகத்திற்கு பணியாற்றி தனது அறுபதாவது வயதில் ஓய்வு பெறும் எம்.பி.நடராஜாவை கௌரவிக்கம் முகமாக ‘நடராஜ மகுடம்’ என்ற மணிவிழா நூல் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

நிகழ்வில் வவுனியா கல்வியல் கல்லூரியின் பீடாதிபதி க.சுவர்ணராஜா, முன்னாள் தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.அன்ரன் சோமராஜா, வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.அன்னமலர், ஆசிரியர் தமிழருவி சிவகுமாரன், அதிபர் த.அமிர்தலிங்கம் மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.