வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் சிறுவர் செயலகம் இணைந்து நடாத்திய “இலட்சியங்களை விதைப்போம்” எனும் தொனிப்பொருளிலான முன்பள்ளி பருவ சிறார்களிற்கான சமூக கலாசார பேரணி ஒன்று நேற்றய தினம் காலை 9 மணிக்கு வவுனியா மாவட்ட செயலகத்திலிருந்து ஆரம்பித்து நகரசபை கலாசார மண்டபம் வரை இடம்பெற்றது.
மேலதிக அர சஅதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் முதன்மை அதிதியாக மாவட்ட அரசஅதிபர் எம். ஹனீபா கலந்துகொண்டார். விசேடவிருந்தினராக மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் பணிப்பாளர் திருமதி நயனா சேனாரட்னவும், வடமாகாண கல்வி அமைச்சின் ஆரம்பப்பிள்ளை அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் யெயா தம்பையாவும் கலந்துகொண்டனர்.
பேரணியானது மாவட்ட செயலக முன்றலில் ஆரம்பமாகி வைத்தியசாலை சுற்றுவட்டத்தினூடாக சென்று நகரசபை மண்டபத்தை அடைந்தது. நிகழ்வுகள் அனைத்தும் நகரசபைகலாசார மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
நிகழ்வில் பெற்றோர்கள் பெண்கள் அமைப்புகள், மாவட்டசெயலக அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.










