வவுனியா செட்டிகுளத்தில் திருக்கேதீஸ்வர சம்பவத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

1155

திருக்கேதீஸ்வர சம்பவத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பிரதான பாதையில் வரவேற்பு வளைவு அகற்றப்பட்டமை மற்றும் நந்திக்கொடியினை காலால் மிதித்து அவமதித்தமை உள்ளிட்ட சம்பவங்களுக்கு எதிரிப்புத் தெரிவித்து, வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இன்று (08.03.2019) கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

செட்டிக்குளம் விவேகானந்தர் முற்றத்திலிருந்து ஊர்வலமாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலகம் சென்று பிரதேச செயலாளரிடம் மனு ஒன்றை கையளித்தனர்.

பிரதேச சைவக் குருமார்கள், இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள், இளைஞர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் எனப் பலரும் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.