வவுனியாவில் வட்டிக்கு பணம் கொடுத்தவர் வீடு புகுந்து தாக்குதல் : குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதி!!

934

வீடு புகுந்து தாக்குதல்

வவுனியாவில் வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர் ஒருவர் அடியாட்களுடன் சென்று குடும்பஸ்தர் ஒருவரை தாக்கிய சம்பவம் வவுனியா திருநாவற்குளத்தில் இன்று (09.03) இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான நபர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தாக்கிய நபர் தொடர்பாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான குடும்பஸ்தர் இச்சம்பவம் பற்றி தெரிவிக்கையில், வட்டிக்கு பணம் வாங்கி வியாபாரம் செய்து வந்த நிலையில் வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டு வியாபார நிலையத்தையும் மூடிவிட்டேன்.

இருக்கும் கடன்களை சிறிது சிறிதாக செலுத்தி வரும் நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக குறித்த நபருக்கு வட்டி கொடுக்க முடியாத நிலையில் இன்று அடியாட்களுடன் எனது வீட்டுக்கு வந்து வட்டிக்கு கடன் கொடுத்த நபர் பணத்தை உடனடியாக தருமாறு மிரட்டிய நிலையில் திடீரென அவர்கள் என் மீது தாக்குதல் நடத்தினர் என தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.