வவுனியா ஓமந்தையில் 9 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

633

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

வவுனியா ஓமந்தை பகுதியில் நேற்று (15.03) இரவு 11 மணியளவில் 9 கிலோ 400கிராம் கேரள கஞ்சாவுடன் ஜா- ஏல பகுதியினை சேர்ந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஓமந்தை நகர் பகுதியில் நேற்றையதினம் ஓமந்தை பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.  இதன் போது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தினை வழி மறித்து சோதனையிட்ட சமயத்தில் 9கிலோ 400கிராம் கேரளா கஞ்சாவினை பயணப்பொதியில் வைத்திருந்த நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர் ஜ- எல பகுதியினை சேர்ந்த 54 வயதுடையவர் எனவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.