ஆவணப்பதிவு ஒரே நாளில்
வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள காணி மாவட்ட பதிவகத்தில் காணிகளை விரைவாக பதிவு செய்யும் ஒருநாள் சேவையினை நடைமுறைப்படுத்தும் ஆரம்ப நிகழ்வு ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலின்படி பொதுநிர்வாக உள்ளக உள்நாட்டலுவல்கள் மாகாண மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஐீர அபேஜவர்த்தன திட்டமிடலில்,
கைத்தொழில் வர்த்தகம் நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் றிசாட் பதியூதின் மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.ஹனீபா அவர்களின் தலைமையில் இன்று (16.03.2019) காலை 9.30 மணியளவில் வெகு சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பின்னர் மங்களவேற்றல் நிகழ்வுடன் நிகழ்வு ஆரம்பமாகியதுடன் நாட்டிற்காக உயிர்நீத்த வீரர்கள் மற்றும் இத் திணைக்களத்தில் சேவையாற்றி காலமானவர்களின் ஆத்ம சாந்திக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், வவுனியா மற்றும் வவுனியா வடக்கு மற்றும் வவுனியா வெண்கல செட்டிக்குள பிரதேச செயலாளர்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள், வவுனியா நகரசபை உறுப்பினர்கள், செட்டிக்குளம் பிரதேச சபை உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






















