வவுனியா தாண்டிக்குளத்தில் கோர விபத்து : சாரதி உட்பட 8 பேர் வைத்தியசாலையில்!!

634

கோர விபத்து

வவுனியா தாண்டிக்குளத்தில் இன்று (17.03.2019) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி உட்பட எட்டுப் பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கயர்ஸ் ரக வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து பனைமரத்துடன் மோதுண்டு இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் பொதுமக்களின் உதவிடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.