கடும் வெப்பம்
வடமேல மற்றும் மேல் மாகாணங்களுடன் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, அநுராதபுரம், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் நாளைய தினமும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்த காலநிலை தொடர்பில் பொது மக்கள் அதிக அவதானம் செலுத்தி அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு கோரியுள்ளது.
அதிக வெப்பத்துடனான வானிலை காரணமாக தோல் நோய், களைப்பு, உடற்சோர்வு என்பன ஏற்படக் கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே அதிகளவு நீரை பருகுமாறும், நிழலான இடங்களை நாடுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களிடம் கோரியுள்ளது.







