வவுனியா விபுலானந்தா கல்லூரியில் நான்கு மாணவர்கள் 9A சித்தி பெற்று சாதனை!!

794

நான்கு மாணவர்கள் 9A சித்தி

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் நான்கு மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்றுள்ளதாக கல்லூரியின் அதிபர் பொன்.சிவநாதன் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பம் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுசாதரணப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் எமது பாடசாலை மாணவர்களும் சிறப்பான சித்திகளைப் பெற்றுள்ளனர்.

அந்தவகையில், முகுந்தரதன் கேசிகன், ஜெகதீஸ்வரன் தனுகாசன், ஸ்ரீசங்கர் கணேசன் ஷரனன், பிரியந்தன் சகீதரன் ஆகிய நான்கு மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்ந்துள்ளனர்.

அத்துடன் 8ஏ,பீ சித்திகளை தியாகராஜா தனுஜன், சுதா அருள்வாசன் ஆகிய இரு மாணவர்களும் பெற்றுள்ளனர். பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் உயர்தரம் கற்கக்கூடிய வகையில் பெறுபேறுகளைப் பெற்றுள்ளதாகவும் கல்லூரியின் அதிபர் மேலும் தெரிவித்தார்.

சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகின்றோம்.