வவுனியா மன்னார் வீதியில் தீ விபத்து : முற்றாக எரிந்து நாசமான மரத்தளபாட நிலையம்!!

703

எரிந்து நாசமான மரத்தளபாட நிலையம்

வவுனியா மன்னார் வீதி பட்டாணிசூர் பகுதியில் இன்று நண்பகல் 3.15 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் மரத்தளபாட நிலையம் ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

வவுனியா மன்னார் வீதி பட்டாணிசூர் பகுதியில் மரவேலை மற்றும் விற்பனை நிலையம் 3.15 மணியளவில் தீப்பற்றி எரிந்துள்ளது. உடனடியாக உரிமையாளரால் நகரசபை தீயணைப்புப்பிரிவு மற்றும்பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த நகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் பொலிசார் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இருப்பினும் பல லட்சம் பெறுமதியான மரத்தளபாடங்கள் மற்றும் மரங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. இத் தீவிபத்து காரணமாக மன்னார் வீதியின் போக்குவரத்து ஒருமணி நேரத்திற்கு மேலாகவும் தடைப்பட்டுள்ளது.