வவுனியாவில் சாரணியத்தின் தந்தையின் 163 வது பிறந்ததினம்!!

5


சாரணியத்தின் தந்தையின் பிறந்ததினம்


வவுனியா விபுலாநந்தா கல்லூரியில் சாரணியத்தின் தந்தை பேடன் பவல் பிரபுவின் 163 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று (22.02.2020) காலை 8.00 மணியளவில் பாடசாலையின் ஜனாதிபதி சாரணர் த.லிசாந்தன் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் சாரணியத்தின் தந்தை பேடன் பவலின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து பூ தூவி மரியாதை செலுத்தப்பட்டது.


நிகழ்வில் பாடசாலை அதிபர் திரு.பொன்னையா சிவநாதன், பாடசாலையின் உதவி சாரண தலைவரும் ஜனாதிபதி சாரணருமாகிய வ.பிரதீபன், ஜனாதிபதி சாரணர் சி.சரோன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.