வவுனியாவில் திருவள்ளுவர் குருபூசை அனுஷ்டிப்பு!!

3


திருவள்ளுவர் குருபூசை


வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் திருவள்ளுவர் குருபூசை இன்று (10.03.2020) காலை 8.30 மணியளவில் நகரசபை உபதலைவர் சு.குமாரசாமி தலைமையில் வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையடியில் நடைபெற்றது.இந் நிகழ்வில் நகரசபை உறுப்பினர்கள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , வர்த்தக சமூகத்தினர் , பொதுமக்கள் , பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதன் போது தமிழருவி சிவகுமாரன் அவர்களின் சொற்பொலிவும் இடம்பெற்றிருந்தது.


வவுனியா நகரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட இவ்வுவச் சிலையை அப்போது நகரசபைத் தலைவர் ஜீ.ரி லிங்கநாதன் அவர்களின் அழைப்பின் பேரில் அக் காலத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த தர்மலிங்கம் சித்தார்த்தனால் 1997.04.04ம் திகதியன்று திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.