வவுனியா செட்டிகுளத்தில் தெய்வீக கிராம நிகழ்வு!!

523


தெய்வீக கிராம நிகழ்வு..



இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வெங்கலச் செட்டிகுள பிரதேச செயலகம் நடாத்திய தெய்வீக கிராம நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை செட்டிக்குளம் முகத்தான்குளம் ஶ்ரீ சித்தி விக்கனேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது.



ஆரம்ப நிகழ்வுகளாக கலை கலாசார பாரம்பரிய நிகழ்வுடன் விருந்தினர்களை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது.




அதனைத் தொடர்ந்து நந்திக் கொடியேற்றல் அறநெறி கீதத்துடன் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து  ஆலய வழிபாடு, குரு பூசை, கோமாதா பூசை, பிடி அரிசி சேமிப்பு வஸ்த்திர தானம், ஞாபகார்த்த மர நடுகை முதலான பல நிகழ்வுகள் இடம்பெற்றன.


இரண்டாம் கட்ட நிகழ்வுகள் பிரதேச செயலாளர் K. சிவகரன் தலைமையில் நடைபெற்றன. மங்கல விளக்கேற்றல் இறை வணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பண்டிதர் வீ.பிரதீபனின் சிறப்பு சொற்பொழிவும் அறநெறி மாணவர்களின் பல்வேறுபட்ட கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பில் அறநெறி  ஆசிரியர்களின் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலாளர் S.Mசமன் பந்துல சேன மேலதிக மாவட்ட செயலாளர் தி.திரேஸ்குமார் செட்டிக்குள பிரதேச செயலாளர் K.சிவகரன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் சி.சண்முகநாதன்,

இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவ.கஜேந்திரகுமார் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கி.சற்சுருவேணு,

கிராம உத்தியோகத்தர்களான எஸ்.பாலஶ்ரீ, திருமதி தேவகி மற்றும் ஆலய பரிபாலன சபையினர் அறநெறி ஆசிரியர்கள் மாணவர்கள் இந்து சமய ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.