வவுனியாவில் ஆராதனை நடாத்திய 20 பேர் கைது செய்யப்பட்டு விடுவிப்பு!!

651

வவுனியா – செட்டிகுளம் முதலியார்குளம் பகுதியில் இன்றைய தினம் ஆராதனை நடாத்திய15 ற்கும் மேற்பட்டோர் செட்டிகுளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுஎச்சரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

கொரோனோ வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் விதமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் வெளியில் திரிவோரை தவிர ஏனையவர்கள் பொலிசாரால் கைது செய்யப்படுவர் என அரசு அறிவித்துள்ளதுடன், ஆலயங்களில் அதிகளவான மக்கள் ஒன்று கூடவேண்டாம் என்றும் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வவுனியா செட்டிகுளம் முதலியார்குளம் பகுதியில் இன்றையதினம்கிறிஸ்தவ மதஆராதனை ஒன்று நடைபெற்றருந்தது.

இது தொடர்பாக செட்டிகுளம்பொலிசாருக்கு கிடைக்கபெற்ற தகவலுக்கமைய அப்பகுதிக்கு சென்ற பொலிசார் ஆராதனையை நடாத்திய போதகர் உட்பட 15 ற்கும் மேற்பட்டோரை கைது செய்திருந்ததுடன் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.