வவுனியாவில் சட்டவிரோத நடவடிக்கையை முறியடித்த இளைஞர்கள்!!

774

சட்டவிரோத நடவடிக்கை..

வவுனியா – பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தட்டாங்குளம் காட்டு பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட கசிப்பு உற்பத்தி நடவடிக்கை வாரிக்குட்டியூர் இளைஞர்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதை அறிந்த வாரிக்குட்டியூர் பகுதி இளைஞர்கள் பூவரசங்குளம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அப்பகுதிக்கு சென்ற குறித்த இளைஞர்கள் அப்பகுதியை முற்றுகையிட்ட நிலையில் கசிப்பு காய்ச்சும் செயற்பாட்டை முன்னெடுத்த நபர்கள் தப்பியோடியுள்ளனர்.

இந்த நிலையில் கசிப்பு காச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மற்றும், பெரல்கள் என்பவற்றை வாரிக்குட்டியூர் பகுதி இளைஞர்கள் மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.