வவுனியாவில் மோட்டார் சைக்கில் விபத்து : சிகிச்சை பலனின்றி ஒருவர் மரணம்!!

782

விபத்து..

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் இன்று (14.04.2020) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் படுகாயமடைந்த 47வயது மதிக்கத்தக்க இந்து மதகுரு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

வவுனியா பூவரசங்குளம் – செட்டிகுளம் வீதியில் உள்ள மணியர்குளம் பகுதியில் சென்ற மோட்டார் சைக்கிள் ஓன்று வீதியில் திரும்ப முற்பட்ட வேளை எதிரே வந்த மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மணியர்குளம் பகுதியைச் சேர்ந்த 47 வயது மதிக்கத்தக்க இந்து மதகுரு ஒருவரும் 26 வயதுடைய இளைஞர் ஓருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்த 47 வயது மதிக்கத்தக்க இந்து மதகுரு அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றபட்டு சிகிச்சை பலனின்றி சற்று முன் மரணமடைந்துள்ளார்.

மணியர்குளம் பகுதியில் அமைந்துள்ள ஆலயமொன்றில் கடமையாற்றும் இந்து மதகுருவே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.