வவுனியா மாவட்டத்திற்கு..

தற்போதைய சூழலில் நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தால் வவுனியா மாவட்டத்திற்கு 205.51 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் நிவாரண விடயங்கள் தொடர்பாக இன்றைய தினம் வினவிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், தற்போதைய நிலையில் மக்களுக்கான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நிதியை ஒதுக்கியுள்ளது.

அதனூடாக வவுனியா மாவட்டத்தில் பல நிவாரண திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. அரச உத்தியோகத்தர்கள் தமது சிரமத்தையும் பார்க்காது மக்களுக்கான பணியை முன்னெடுத்துள்ளனர்.

இந்த வகையில் வவுனியா மாவட்டத்திற்கு 205.51 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனூடாக சமுர்த்தி நிவாரணத்திற்காக 147.83 மில்லியன் ரூபாவும், விவசாய காப்புறுதிக்காக 1.595 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மிகுதி தொகை ஏனைய நிவாரணங்களுக்காகவும் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.




