வவுனியா ஓமந்தை இராணுவ சாவடிக்கு பிரதேச சபையினால் மின்விளக்குகள்!!

581

இராணுவ சாவடிக்கு மின்விளக்குகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா தொற்றையடுத்து வவுனியா ஓமந்தை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ சாவடிக்கு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினரினால் இன்று வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டது.

நாட்டில் கொரனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து நாடு பூராகவும் ஊரடங்குச சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதனையடுத்து வவுனியா ஒமந்தை பகுதியில் இராணுவ சாவடி அமைக்கப்பட்டு வெளிமாவட்டத்திலிருந்து வவுனியாவிற்கு வருவதனையும் வவுனியாவிலிருந்து வேறு மாவட்டத்திற்கு அனுமதியின்றி செல்வது தொடர்பில் இராணுவத்தினரினால் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இராணுவச்சாவடி அமைந்துள்ள பகுதியில் இரவு நேரத்தில் இருளாக காணப்படுவதினால் இராணுவத்தினர் சோதனைகளை மேற்கொள்வதில் பல்வேறு இன்னல்களை மேற்கொள்வதாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினரிடம் வன்னி இராணுவத் தளபதி விடுத்து கோரிக்கைக்கமைவாக இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச தவிசாளர் து.நடராஜசிங்கம் தலைமையில் இராணுவ சாவடியினை சூழவுள்ள பகுதியில் நான்கு மின்விளக்குகளை பிரதேச சபை ஊழியர்கள் பொருத்தினார்கள்.