வவுனியா வைத்தியசாலை ஊழியருக்கு கொரனா தொற்று!!

1159

கொரனா தொற்று..

யாழில் இடம்பெற்ற ஆராதனை கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் யாழில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த வவுனியா வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த மாதம் 15 ஆம் திகதி யாழ் அரியாலைப் பகுதியில் இடம்பெற்ற சுவிஸ் மதபோதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட நிலையில் வடமாகாணத்தைச் சேர்ந்த பலரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் வவுனியா வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர் உட்பட சுவிஸ் மதபோதகருடன் நெருங்கி பழகிய 20 பேர் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் கடந்த மாதம் 23 ஆம் திகதியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

தனிமைப்படுத்தலை தொடர்ந்து வவுனியாவை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது யாழில் நேற்று (14.04) மேற்கோள்ளபட்ட பரிசோதனைகளில் உறுதிசெய்யப்பட்டது.

இதேவேளை, குறித்த நபருடைய குடும்பத்தினர் மற்றும் அவருடன் நெருக்கிப் பழகியவர்களும் வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியால் வவுனியாவைச் சேர்ந்த மக்கள் அச்சமடையத் தேவையில்லை. குறிப்பிட்ட ஊழியருடன் நெருங்கிய தொடர்பிலுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.