வவுனியாவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் நீரில் முழ்கி மரணம்!!

842

நீரில் முழ்கி..

வவுனியா, ஆசிகுளம் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். இன்று (15.04.2020) மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, ஆசிகுளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மயிலங்குளம் குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தவறுதலாக நீரில் வீழ்ந்து மூழ்கி மரணமடைந்துள்ளார்.

அதனை அவதானித்தவர்கள் அவரை மீட்டு அவசர நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வந்த போதும் வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே மரணமாகியுள்ளதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விபத்தில் ஆசிகுளம் பகுதியைச் சேர்ந்த எஸ்.நகுலேஸ்வரன் என்ற 44 வயதுடைய குடும்பஸ்தரே மரணமடைந்தவராவார். இது தொடர்பில் சிதம்பரபுரம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்