வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 4 பேர் கைது : வாகனங்கள் பறிமுதல்!!

546

4 பேர் கைது..

வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் வாகனங்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை 6 மணியில் இருந்து நேற்று மாலை 6 மணி வரையிலான காலப்பகுதியிலேயே குறித்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரனா வைரஸ் தொற்றையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி வீதியில் மோட்டர் சைக்கிள்களில் பயணித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,

அவர்களின் 3 மோட்டர் சைக்கிள்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரது துவிச்சக்கர வண்டியும் பொலிசாரால் தடுத்து வைக்கபடபட்டுள்ளது.

கொரனா வைரஸ் தொற்றை தடுக்க அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழக்குமாறு கோரியுள்ள பொலிசார் ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.