வவுனியாவில் ஊரடங்கு நேரத்தில் கிராம அலுவலங்களுக்கு வரவழைக்கப்பட்டுள்ள மக்கள்!!

684

ஊரடங்கு நேரத்தில்..

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றையடுத்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியாவிலுள்ள தோணிக்கல், கோவில்குளம் உட்பட பெரும்பாலான கிராம சேவையாளர் அலுவலகங்களை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் முகமாக வவுனியா உட்பட நாட்டின் பல பாகங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு காலப்பகுதியில 5000 ரூபா கொடுப்பனவனவுகளுக்கான பதிவுகளை வீடு வீடாக சென்று பதிவுகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு அரசாங்கம் அறவித்தல் விடுத்திருந்தது.

எனினும் வவுனியாவில் இன்றையதினம் (18.04.2020) காலை 9.00 மணி தொடக்கம் தற்போது வரை அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவனவுகளுக்கான பதிவுகளை மேற்கொள்வதற்காக ஊடரங்கு சட்டத்தினை மீறி (வவுனியாவில் ஊரடங்கு சட்டம் அமுலில்) மக்களை கிராம சேவையாளர் அலுவலகத்திற்கு வரவழைத்து பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக வவுனியாவிலுள்ள பெரும்பாலான கிராம சேவையாளர் அலுவலகங்களில் 200க்கு மேற்பட்ட மக்கள் சமூக இடைவெளி பேனாது முகக்கவசம் போன்ற இல்லாமல் வரிசையில் காத்துநின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன அவர்களை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு வினாவிய போது, இவ்விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.