வவுனியா மாவட்ட செயலகத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் ம ரணித்தவர்கள் நினைவாக அஞ்சலி!!

15


வவுனியா மாவட்ட செயலகத்தில்..


உயிர்த்த ஞாயிறு சம்பவத்தில் ம ரணித்தவர்களின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நினைவு அஞ்சலி நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு,


கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் ம ரணித்தவர்கள் நினைவாகவும், அவர்களது ஆத்ம சாந்திக்காவும் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.


இதன்போது அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் சமூக இடைவெளிகளைப் பேணியதுடன் முகக்கவசம் அணிந்து சுகாதார வழிமுறைகளை பின்பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.