வவுனியாவில் திடீரென மயங்கி விழுந்த நபர் : வைத்தியசாலை தரப்பினரின் தகவல்!!

722

திடீரென மயங்கி விழுந்த நபர்..

வவுனியா, இரண்டாம் குறுக்குத் தெருவில் திடீரென மயங்கி விழுந்தவருக்கு நெஞ்சு வலியே காரணம் என வைத்தியசாலை தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெரு பகுதியில் நேற்று மதியம் வீதியால் சென்ற நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார்.

இது தொடர்பில் அப்பகுதியினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த சுகாதார பரிசோதகர்களும், பொலிஸாரும் அந்த நபரை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

அந்த நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது. இருந்த போதும், குறித்த நபர் நெஞ்சுவலி காரணமாகவே மயங்கி விழுந்துள்ளதாகவும், அவரின் உடல் நிலை தேறி வருவதாகவும் வைத்தியசாலை தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.