வவுனியா நகரில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு : களத்தில் இறங்கிய விசேட அணியினர்!!

907

தொற்று நீக்கும் செயற்பாடு..

வெலிசறை இராணுவ முகாமில் இருந்து விடுமுறையில் வவுனியா மகாகச்சகொடி பகுதிக்கு வந்த கடற்படை வீரருக்கு கொரேனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதினையடுத்து குறித்த கடற்படை வீரர் வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்துள்ளார். இதனையடுத்து வவுனியா நகரில் இன்று (28.04.2020) காலை தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா தொற்றையடுத்து அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் வவுனியா மாவட்டத்தில் 15 மணிநேரம் தளர்த்தப்பட்ட நிலையில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் உத்தரவுக்கு அமைவாக வவுனியா நகரிலிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன்,

வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா விசேட அ திரடிப்ப டையினர் ஆகியோர் இணைந்து வவுனியா நகரில் தொற்று நீக்கும் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினரின் ஒத்துழைப்புடன் பாதசாரிகள் நடைபாதை, வர்த்தக நிலையங்களுக்கு முன் பகுதி போன்றன தண்ணீர் அடித்து சுத்தம் செய்யப்பட்டதுடன் விசேட அ திரடிப்ப டையினர் மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினர் இணைந்து தொற்று நீக்கி ம ருந்து தெளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.