வவுனியாவில் உயர்மன்ற தீர்ப்பையடுத்து வெடி கொழுத்தி கொண்டாட்டம்!!

2437


உயர்மன்ற தீர்ப்பையடுத்து..


பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் தேர்தல் திகதியிட்ட வர்த்தமானி என்பவற்றை தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் இன்று(02.06.2020 மாலை நிராகரித்தைத் தொடர்ந்து வவுனியா நகரில் பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி மகிழ்ந்தார்கள்.பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் தேர்தல் திகதியிட்டமை தொடர்பாக வெளியான வர்த்தமானிக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யபட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் 5 நீதியரசர்கள் முன்னிலையில் கடந்த 10 நாட்களாக இடம்பெற்று வந்த நிலையில் தீர்ப்பு வெளியாகியது.


இதனையடுது;து, பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் வேட்பாளர் ஜனக நந்தகுமார ஆகியோர் வவுனியா பழைய பேரூந்து நிலையம், நகரப்பகுதி என்பவற்றில் தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்து வெடி கொழுத்தி தீர்ப்பு குறித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.