வவுனியாவில் கை,கால் கட்டப்பட்டு அழுகிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!!

3040

இளைஞனின் சடலம் மீட்பு..

வவுனியா மகாறம்பைக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட காத்தார் சின்னக்குளம் 4ம் ஒழுங்கையில் கை,கால் க ட்டப்பட்டு அழுகிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலத்தினை இன்று (03.06.2020) காலை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஒர் குடும்பத்தினர் (கணவர் (மரணித்த இளைஞன்) , மனைவி, கணவரின் தயார்) கடந்த 30.08.2019 அன்று காத்தார் சின்னக்குளம் 4ம் ஒழுங்கையில் வாடகைக்கு வீடொன்றினை பெற்று வசித்து வந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மரணித்த இளைஞரின் தயார் இந்தியாவிற்கு சென்றுள்ளார்.

இந் நிலையில (கணவர் (மரணித்த இளைஞன்) , மனைவி இருவரும் குறித்த வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மரணித்த இளைஞரின் மனைவியும் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார். தனிமையில் வசித்த நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டிலிருந்து இன்றையதினம் காலை துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை அடுத்து வீட்டிற்கு முன்பாக ஒன்று கூடிய கிராம மக்கள் சந்தேகமடைந்த நிலையில் வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் வீட்டின் யன்னல் வழியாக பார்த்த போது தூ க்கில் தொ ங்கிய நிலையில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சடலமாக இருப்பதை அவதானித்தனர்.

அதன் பின்னர் கதவினை உடைத்து பொலிஸார் பார்வையிட்ட சமயத்தில் கை மற்றும் கால் கயிற்றினால் கட்டப்பட்டுள்ளதுடன் அழுகிய நிலையில் குறித்த இளைஞனின் சடலம் காணப்பட்டுள்ளது.

30வயது மதிக்கத்தக்க கொழும்பு பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் மேலதிக விசாரணைகளுக்காக குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.