வவுனியா நகரசபை சுகாதார தொழிலாளர்கள் எந்த வித பாதுகாப்புமின்றி பணியாற்றும் அவலம்!!

1055

நகரசபை சுகாதார தொழிலாளர்கள்..

வவுனியா நகரசபைத் சுகாதார தொழிலாளர்கள் எந்த வித பாதுகாப்புமின்றி கொரோனா அச்சத்திற்கு மத்தியில் பணியாற்றி வருகின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அ ச்சுறுத்தல் காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. மக்கள் பாதுகாப்பு கருதி முகக்கவசம் அணியுமாறும் கூறப்பட்டுள்ளது. ஆனால் வவுனியா நகரசபை சுகாதார தொழிலாளர்களின் நிலை?

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை அகற்றும் சுகாதார சுத்திகரிப்பு தொழிலாளர்கள் முகமூடி அணியாமலும் கையுறைகள் அணியாதும் கழிவுகளை அள்ளி அதனை வாகனத்தில் ஏற்றிச் செல்வதை அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக மக்கள் தாம் பாவித்த முகக்கவசம் உள்ளிட்ட அனைத்து கழிவுகளையும் குப்பைக் கூடைக்குள் போட அதனை தமது கைகளால் அகற்றுவதை காண முடிகிறது.

இவர்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என்பதே மக்களின் குற்றச்சாட்டு.