வவுனியாவில் ஊரடங்கு அமுலில் : அதிகரித்துள்ள மக்களின் நடமாட்டம்!!

1502


வவுனியாவில் ஊரடங்கு அமுலில்..


வவுனியா உட்பட நாட்டின் பல பாகங்களில் நேற்றையதினம் (03.06) இரவு 10.00 மணிமுதல் நாளை மறுதினம் சனிக்கிழமை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.இந் நிலையில் வவுனியா மாவட்டத்தில் இன்றையதினம் (04.06.2020) ஊரடங்கிலும் மக்களின் நடமாட்டம் காணப்படுவதுடன் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், மருந்தங்கள் திறக்கப்பட்டுள்ளன.


அத்துடன் வீதிகளில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.