வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் எண்ணெய் காப்பு -01.04.2021

2253

வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் குடமுழுக்கு பெருவிழாவை முன்னிட்டு இன்று 01.04.2021 வியாழகிழமை காலை 6.00 மணிமுதல் எண்ணெய் காப்பு சாத்தும் வைபவம் இடம்பெற்று வருகின்றது.

மேற்படி வைபவத்தில் ஏராளமான அம்பாளின் பக்தர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டு தெய்வ விக்கிரகங்களுக்கு எண்ணெய் காப்பு சாத்தி வருகின்றனர்.

நாளை 02.04.2021 வெள்ளிகிழமையன்று காலை 9.00 மணி முதல் 10.15 மணிவரையான சுபவேளையில் ஆலயத்தில் குடமுழுக்கு பெருவிழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.