வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகம்!(வீடியோ)

2312

வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் குடமுழுக்கு பெருவிழா இன்று 02.04.2021 வெள்ளிகிழமை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. 

காலை 6.00 மணிமுதல்  ஆலயத்தின் பிரதமகுரு சிவஶ்ரீ முத்துஜெயந்திநாதக்குருக்கள் தலைமையில் கிரியைகள் ஆரம்பமானதுடன்  காலை 9.00 மணி முதல் 10.15 மணிவரையான சுபவேளையில் ஆலயத்தில் குடமுழுக்கு பெருவிழா கும்பாபிசேக குரு சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சிவபோதம் ஶ்ரீ ஐயப்பதாச சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

மேற்படி குடமுழுக்கு பெருவிழாவின் போது  பல நூற்றுக்கணக்கான ஸ்ரீ கருமாரி நாகபூசணி அமபாளின்  பக்தர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.