14ம் திகதி பயணக்கட்டுப்பாடு நீக்கப்படுமா?

14970

பயணக்கட்டுப்பாடு..

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 7ஆம் திகதி தளர்த்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 14ஆம் திகதி காலை வரையில் நீடிக்க தீர்மானித்துள்ளதாக,

கோவிட் செயலணியின் பிரதானியும், இராணுவத்தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். சுகாதார தரப்பினரின் தொடர்ச்சியான அறிவுறுத்தலுக்கு அமைய இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கோவிட் – 19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் இரண்டாயிரத்தை தாண்டியுள்ள நிலையில் இந்த எண்ணிக்கை ஆயிரத்துக்கு குறையும் பட்சத்தில் நாட்டை மீண்டும் திறக்க முடியும் எனவும்,

இல்லையேல் நிலைமைகளை கட்டுப்படுத்தும் வரையில் மேலும் இருவார காலமேனும் பயணக் கட்டுப்பாட்டை நீடிக்க நேரிடுமென்றும் சுகாதார தரப்பின் கோவிட் – 19 செயலணி பிரதானியான இராணுவ தளபதி சவேந்திர சில்வாவிடம் தெரிவித்துள்ளனர்.

-தமிழ்வின்-