வவுனியாவில் போக்குவரத்து பொலிசார் விசேட சோதனை : தேவையின்றி பயணிப்போருக்கு வழக்கு பதிவு!!

3257

விசேட சோதனை..

கோவிட் தொற்று காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டதை மீறி அத்தியாவசிய தேவையின்றி வவுனியா நகருக்குள் நுழையும் வாகனங்களுக்கு எதிராக போக்குவரத்து பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் வாகனங்களை கண்டறியும் முகமாக போக்குவரத்து பொலிசார் குருமன்காடு மற்றும் மன்னார் வீதியில் இன்று (03.09) காலை விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது, மன்னார் வீதி வழியாக வவுனியா நகருக்குள் நுழைந்த அனைத்து வாகனங்களும் வழி மறிக்கப்பட்டு, அவர்களது போக்குவரத்து அனுமதிப் பத்திரம் சோதனை செய்யப்பட்டதுடன்,

அத்தியாவசிய தேவையின்றி நகருக்குள் பிரவேசித்த வாகனங்கள் பலவும் கடுமையான எச்சரிக்கையுடன் திரும்ப அனுப்பி வைக்கப்பட்டது.

அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்ட 10 வாகன சாரதிகளுக்கு எதிராக போக்குவரத்து பொலிசாரால் சட்ட நடவடிக்கைக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது.