வவுனியாவில் எரிபொருள் கோரி வீதியை மறித்து போராட்டம்!!

2746


வீதியை மறித்து போராட்டம்..எரிபொருள் கோரி வவுனியாவில் ஏ9 வீதி மற்றும் மன்னார் வீதி என்பவற்றை மறித்து இன்று (15.06) பிற்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.வவுனியா, பண்டாரவன்னியன் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள ஐஓசி எரிபொருள் நிலையத்தில் பெற்றோலுக்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.
இதன்போது குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில பெற்றோல் முடிந்து விட்டதாக தெரிவித்தையடுத்து அப் பகுதியில் நின்ற மக்கள் ஏ9 வீதி மற்றும் மன்னார் வீதி என்பவற்றை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் ஆர்ப்பாட்டங்காரரை அகற்ற முற்பட்ட போது பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது.

எனினும் ஆர்ப்பாட்டங்காரர்களை பொலிசார் வீதியில் இருந்து அகற்றியதுடன், குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய தாங்கியில் எரிபொருள் இல்லை என்பதை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து சென்று காட்டியிருந்தனர். இதனையடுத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனர்.