வவுனியாவில் “தமிழ் இனப் படுகொலையாளிகளை சர்வதேசமே கைது செய்” என போராட்டம்!!

1523


போராட்டம்..தமிழ் இனப் படுகொலையாளிகளை சர்வதேசமே உடன் கைது செய் எனத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் இன்று (30.07) இடம்பெற்றது.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘சர்வதேசமே வீதியில் கண்ணீருடன் நாம், தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட சிறிலங்கா, தமிழ் இனப்படுகொலையாளிகளான கோத்தாவையும்- மகிந்தாவையும் சர்வதேசமே கைது செய்,
வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியை முற்றாக நிறுத்த வேண்டும்’ என எழுத்ப்பட்ட சுலோக அட்டைகளையும் போராட்டகாரர்கள் ஏந்தியிருந்ததுடன், காணமல் ஆக்க்பட்டோருக்கு நீதி கோரி கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.