வவுனியாவை வந்தடைந்த பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போராட்ட ஊர்தி!!

263


கையெழுத்து போராட்ட ஊர்தி.பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்ககோரிய ஊர்திவழி கையழுத்து போராட்டம் இன்றையதினம் (18.09) வவுனியாவை வந்தடைந்தது. இலங்கை தழிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மற்றும், சர்வஜன நீதி அமைப்பு இணைந்து முன்னெடுத்துவரும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையான ஊர்திவழி கையெழுத்து போராட்டம் வவுனியாவிலும் முன்னெடுக்கப்பட்டது.காலை 10 மணியளவில் வவுனியா தமிழரசுகட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் ஆரம்பிக்கப்பட்டகுறித்தகையெழுத்து போராட்டம், நகரின் பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதி்ராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளையின் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டு தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்.