வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தொட்டில் கயிறு இறுகி பரிதாபமாக பலி!!

2030


து.நடராஜசிங்கம்..வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், ரெலோ அமைப்பின் மத்திய குழு உறுப்பினருமான து.நடராஜசிங்கம் (ரவி) மரணமடைந்துள்ளார்.வீட்டில் தனது பிள்ளைக்கு கட்டியிருந்த தொட்டில் கயிற்றை விளையாட்டாக கழுத்துக்கு போட்ட போது அது இறுகியிருந்தது. இதனை அவதானித்த குடும்பத்தினர் மற்றும் அயலவர்கள் அவரை மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே மரணடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் முன்னிலையில் இன்று (20.09) மரண விசாரணைகள் இடம்பெற்ற நிலையில், தனது குழந்தையின் தொட்டில் கயிற்றினை தளபாடம் ஒன்றின் மேல் ஏறி நின்று கழுத்தில் போட்ட போது,


அவர் ஏறி நின்ற தளபாடம் வீழ்ந்தமையால் கயிறு இறுகி மரணமடைந்துள்ளதாக மரண விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. விசாரணைகளின் பின் சடலம் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.