வவுனியா ஓமந்தை ஓவம் விளையாட்டுக் கழகத்தின் 2022ம் ஆண்டிற்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி!!

698


மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி..ஓவம் விளையாட்டு கழகத்தின் 2022ம் ஆண்டிற்கான மென்பந்து சுற்றுபப்போட்டி கடந்த 18.09.2022ம் திகதி ஓவம் விளையாட்டு கழகத்தின் மைதானத்தில் நடைபெற்றது.இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தமிழ் பிரதேச சபை தவிசாளர் திரு.தர்மலிங்கம் யோகராசா, சிறப்பு விருந்தினர் கதிர்காமசேகரன் சசீலன் (Herlish Agriculture ஏற்றுமதி பிரிவு வடமாகாண முகாமையாளர்) மற்றும்,
விருந்தினர்களாக வவுனியா மாவட்ட கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.J. தாட்சாயினி, வன்னாங்குளம் கண்ணகி அம்மன் ஆலயத்தின் செயலாளர் திரு.பா.திபாகரன் மற்றும் கழகத்தின் தலைவர் திரு வரதகுமார் மற்றும் செயலாளர் திரு.விஸ்ணுதாஸன் ஓவம் விளையாட்டு கழகத்தின் ஒழுங்கமைப்பாளர் திரு தமிழருவி சிவகுமாரன்,


கழகத்தின் ஒழுக்காற்று குழு உறுப்பினர் திரு. முரளிதரன் (ஆசிரிய கல்வியாளர் வான்மை விருத்தி நிலையம் – புளியங்குளம்) ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இறுதி பேட்டிக்கு ஓவம் A அணி மற்றும் புதிய ஒளி அணியினர் மோதிகொண்டனர். நாணைய சுழற்சியில் வெற்றி பெற்ற ஓவம் A அணியின் தலைவர் கோகுலதாஸன் கழத்தடுப்பை தெரிவுசெய்தார்.


முதலில் துடுப்பெடுத்தாடிய புதிய ஒளி அணியினர் 06 ஓவரை எதிர்கொண்டு 04 விக்கெட் இழப்பிற்கு மொத்தமாக 25 ஓட்டங்களை பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓவம் A அணியினர் 4 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 26 ஓட்டங்களை பெற்று கிண்ணத்தை கைப்பற்றினர்.

இதில் ஆட்டநாயகன் விருதை யது பெற்றுக்கொண்டார். Play Boys அணிக்கு எதிராக பெற்றுகொண்ட 50 ஓட்டங்களுக்கு மற்றும் சிறந்த பந்துவீச்சாளருக்கான பரிசை ஓவம் A அணியின் யெனோஜன் பெற்றுக்கொண்டார்.