மாமடு பகுதியில்..

வவுனியாவில் மின்னல் தாக்கி பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக மாமடு பொலிசார் தெரிவித்தனர். இன்று (07.10) மாலை 5.30 மணிக்கு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிநவருவதாவது,

வவுனியா மாமடு பகுதியில் உள்ள குளத்தில் தாமரைப் பூ பறிக்க சென்ற பெண் மீது மின்னல் தாக்கியதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

வவுனியா, மாமடு, அட்டமஸ்கட பகுதியை சேர்ந்த 50 வயதுடைய ஆ.ஏ.சந்திரலதா என்ற குடும்ப பெண்ணே இச் சம்பவத்தில் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாமடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




