வவுனியா போக்குவரத்து பொலிஸாரினால் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் வீதி ஒழுங்கு விதிமுறை பயிற்சி!!

1080

வீதி ஒழுங்கு விதிமுறை பயிற்சி..

வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ரோஷன் சந்திரசேகர எண்ணக்கருவில் வீதி ஒழுங்குகள், வீதி விபத்துக்கள் தொடர்பிலான கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் போக்குவரத்து பொலிஸாரினால் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை நேரத்தில் வீதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது , எந்த வகையான சமிச்சைகளை பயன்படுத்துவது தொடர்பிலான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

மாவட்டத்தில் பாடசாலை நேரத்தில் அதிகரிக்கும் விபத்துக்களை தடுக்கும் முகமாகவே மாணவர்களுக்கு இப் பயிற்சிகள் வழங்கப்படுவதாக வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ரோஷன் சந்திரசேகர தெரிவித்தார்.