வவுனியா பேருந்து விபத்து : யாழ். பல்கலைக்கழக மாணவி உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு!!

2248

பேருந்து விபத்து..

வவுனியா பேருந்து விபத்தில் உயிரிழந்த மூவரின் யெர் விபரங்கள் வெளியாகியுள்ளன. குறித்த விபத்தில் மூவர் மரணமடைந்ததுடன், 16 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 4 பேர் தீவில சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மாணவியான நாவலப்பிட்டிய பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் சயாகரி (வயது 23),

சாரதியான கோவிலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எஸ்.சிவரூபன் (வயது 32), தம்பசிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (வயது 24) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

வவுனியாவில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்த 23 வயதான பெண் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. வவுனியா – நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வேகமாக சென்ற அதி சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையிலேயே குறித்த விபத்தில் உயிரிழந்த யுவதி நாவலப்பிட்டிய – பெனித்து முல்ல பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. குறித்த பெண் யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி கற்று வந்த 23 வயதான ராமகிருஷ்ணன் சயாகரி என தெரியவருகிறது.

அவரின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் ஏ9 வீதியூடான போக்குவரத்து 2 மணிநேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பேருந்தில் பயணித்த 16 பேர் காயமடைந்த நிலையில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் விபத்துக்குளான அதி சொகுசு பேருந்தை மீட்கும் பணியில் இன்று (05.11.2022) காலை இராணுவத்தினர் ஈடுபட்டிருந்ததுடன் இதன் காரணமாக ஏ9 வீதியூடான போக்குவரத்து 2 மணிநேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.