வவுனியாவில் விபத்துக்குளான வாகனத்தை அகற்றும் பணியில் இராணுவம் : ஏ9 வீதி போக்குவரத்து 2 மணிநேரத்திற்கு மேலாக பாதிப்பு!!

2063

ஏ9 வீதி..

வவுனியா, நொச்சிமோட்டைப் பாலப் பகுதியில் விபத்துக்குளான அதி சொகுசு பேரூந்தை மீட்கும் பணியில் இன்று (05.11) காலை இராணுவத்தினர் ஈடுபட்டுள்ள நிலையில் ஏ9 வீதி போக்குவரத்து 2 மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதி சொகுசு பேரூந்து வவுனியா, நொச்சிமோட்டைப் பகுதியில் இன்று அதிகாலை 12.15 அளவில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து பாலத்துடன் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

குறித்த பேரூந்தை தொடர்ந்து வந்த மற்றுமொரு சொகுசு பேரூந்து வீதியை விட்டு விலகிய நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் பேரூந்து சாரதி மற்றும் பெண் ஒருவர் உட்பட 3 பேர் மரணமடைந்ததுடன்,

16 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்துக்குள்ளான அதி சொகுசு பேரூந்தினை மீட்கும் பணி பாரிய பாரந்தூக்கியின் துணையுடன் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக ஏ9 வீதி போக்குவரத்துக்கள் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக பாதிப்படைந்துள்ளதுடன், ஏ9 வீதியில் பாலத்தின் இரண்டு மருங்கிலும் ஒரு கிலோமீற்றர் நீளத்திற்கு வாகனங்கள் காத்து நிற்பதையும் அவதானிக்க முடிந்தது.