வவுனியா வன்னி கூட்டுப்படை தலைமையகத்தில் வந்திறங்கிய ஜனாதிபதியை வரவேற்ற அமைச்சர் டக்ளஸ்!! 

905

ஜனாதிபதி..

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கான விஜயமாக வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப் தலையகத்தில் விசேட உலங்குவானூர்தி மூலம் வருகை தந்தார்.

இன்று (19.11) காலை 9 மணிக்கு வருகை தந்த ஜனாதிபதியை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் ஆகியோர் நேரில் சென்று வரவேற்று அழைத்து வந்தனர்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் அரச உயர்மட்ட அதிகாரிகளுடன் விசேட கூட்டம் இடம்பெற்றது. இதற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.