கூலிப்படையை ஏவி கணவனை தீர்த்துக்கட்ட மனைவி போட்ட திட்டம் : இறுதியில் நடந்த பரிதாபம்!!

373

மதுரையில்..

மதுரை திருப்பாலை ஜி.ஆர் நகரை சேர்ந்தவர்கல் செந்தில் குமார் – வைஷ்ணவி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இன்ஜினியராக செந்தில் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த செந்தில்குமார் கடந்த மாதம் ஊருக்கு வந்திருந்தபோது தனது மகளை பள்ளியில் சென்று விட்டுவிட்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது பொன்விழா நகர் அருகே வந்து கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இரண்டு பேர் அவரை பின் தொடர்ந்து வந்தனர்.

இந்நிலையில், செந்தில்குமாரின் வாகனத்தின் மீது மோதி கீழே சாய்த்து பட்டகத்தியால் அவரை வெட்டி விட்டு தப்பினர். படுகாயம் அடைந்த செந்தில்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சம்பவம் குறித்து திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார் மற்றும் அவரது மனைவியின் செல்போன் எண்களை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் வைஷ்ணவிக்கும், அவருடைய உறவினரான சிவகங்கையை சேர்ந்த வெங்கடேசனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.

பின்னர் விசாரணையில் கணவர் செந்தில்குமார் கள்ளக்காதலுக்கு இடையூறு ஏற்படுத்துவார் என கருதி நகையை அடமானம் வைத்து ரூ.1 லட்சம் கொடுத்து வெங்கடேசன் மூலமாக கூலிப்படையை ஏவி கொலை முயற்சி செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, வைஷ்ணவிக்கு உடந்தையாக இருந்த வெங்கடேசனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்காதல் தகராறில் கூலிப்படையை ஏறி கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.