வவுனியாவில் இயேசு பாலனின் பிறப்பை கொண்டாடும் கிறிஸ்மஸ் சிறப்பு ஆராதனைகள்!!

722

கிறிஸ்மஸ் சிறப்பு ஆராதனைகள்..

வவுனியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் அமைதியான முறையில் பாலன் பிறப்பு நத்தார் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

அந்தவகையில், வவுனியாவின் பிரதான கிறிஸ்தவ தேவாலயமான இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு விசேட திருப்பலி பூஜைகள் இடம்பெற்று, திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பாலன் பிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த மக்கள் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைப் பரிமாற்றிக் கொண்டதுடன், பாலன் பிறப்பு வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.