300 வருடங்களாக வற்றாத தண்ணீர் : காலணி அணியாமல் தண்ணீர் எடுக்கும் மக்கள் : வியக்க வைக்கும் அதிசய கிணறு!!

495

கேரளாவில்..

அவ்வப்போது நம்மை சுற்றி உள்ள ஆச்சரியத்தை உண்டு பண்ணும் இடங்கள் தொடர்பான செய்திகள் மற்றும் வீடியோக்கள் பெரிய அளவில் இணையத்தில் வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம்.

அப்படி ஒரு இடத்தை பற்றி நாம் கேட்கும் போது நிச்சயம் ஒருவித பிரம்மிப்பை தான் நமக்குள் கடத்தி செல்லும். அந்த வகையில், ஒரு பழமை வாய்ந்த இடம் குறித்த செய்தி தான் தற்போது பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் அமைந்துள்ளது பாக்கம் என்னும் கிராமம். இந்த கிராமத்தில் அதிசய கிணறு ஒன்று அமைந்துள்ளது. இந்த பகுதியில் வறட்சி ஏற்பட்ட சமயத்தில் கூட இந்த கிணறு கொஞ்சம் கூட நீர் வற்றாமல் இருந்து அப்பகுதி மக்களை காப்பாற்றியதாக தகவல்கள் கூறுகின்றது.

இந்த வற்றாத கிணற்றின் பெயர் பாக்கம் திருமுகம் கேணி என தெரிகிறது. சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கிணறு இருக்கும் பகுதி அருகே குறும்பர் இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் அவர்களின் கலாச்சாரத்தில் ஒரு பகுதியாகவே இந்த கிணறு மாறி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

ஒரு சமயத்தில் இந்த ஊரில் திருமணம் செய்து வரும் பெண்கள், இந்த கிணற்றில் ஒரு குடம் தண்ணீர் எடுத்து விட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அதே போல, கிணற்றில் நீர் எடுக்க சொல்லும் அப்பகுதி மக்கள் இதனை தெய்வீக சக்தி வாய்ந்ததாக பார்க்கின்றனர். இதற்கு உதாரணம் இந்த கிணற்றிற்கு அருகே தண்ணீர் எடுக்கச் செல்லும் நபர்கள், செருப்பை கழற்றி வைத்து விட்டு கிணறு அருகே செல்வது தான்.

எத்தனை முறை தண்ணீர் எடுத்துக் கொண்டே இருந்தாலும் அந்த கிணற்றில் நீர் வற்றாமல் அதே நிலையில் இருக்கும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் நிலையில் ஆண்டுக்கு ஒரு முறை நீர் நிச்சயம் வற்றவே கூடாது என ஒரு சில சடங்கு முறைகளையும் அப்பகுதி மக்கள் இந்த கிணற்றிற்கு மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

வறட்சிகள் பல கடந்த போதிலும் அந்த கிணற்றில் தண்ணீர் வற்றாமல் இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அப்பகுதி மக்களுக்கு தெய்வீக உணர்வுடன் கூடிய பழமையான கிணறாக விளங்குவதால் இது தொடர்பான செய்தியை பலரும் வியப்புடன் கவனித்து வருகின்றனர்.