வவுனியா நகர மத்தியில் இரண்டு கட்சித் தலைவர்களுக்கு சிலை!!

1091

கட்சித் தலைவர்களுக்கு சிலை..

வவுனியா நகர மத்தியில் இரண்டு கட்சித் தலைவர்களுக்கு சிலை வைப்பதற்கான கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வருகின்றது.
இரவோடு இரவாக அமைக்கப்பட்ட குறித்த கட்டுமானப்பணி தொடர்பில் வவுனியா நகரசபை தலைவரிடம் கேட்டபோது,

ஈ பி ஆர் எல் எப் கட்சியின் தலைவர் பத்மநாபா மற்றும் புளொட் அமைப்பின் தலைவர் உமாமகேஸ்வரனுக்கு சிலை வைப்பதற்காக குறித்த இடத்தில் கட்டுமானமொன்று அமைக்கப்படுவதாக தெரிவித்ததுடன்,

அதற்கான அனுமதி வட மாகாண ஆளுனரிடம் பெறப்பட்டதாகவும் தெரிவித்தார். இதேவேளை அவ்விடத்தில் செல்வாவின் சிலை அனுமதி பெறப்பட்டா கட்டப்பட்டது என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார்.

இதைவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் கேட்டபோது, பத்மநாபாவின் சிலை குறித்த இடத்தில் வைக்கப்படவுள்ளது தெரிவித்ததுடன் அதற்கான நகரசபை அனுமதி 5 மாதங்களுக்கு முன்பே பெறப்பட்டதாகவும்,

வட மாகாண ஆளுனர் உள்ளுராட்சி மன்ற அனுமதி மாத்திரம் போதுமானது என தெரிவித்ததாகவும் கூறினார். எனினும் இவ்விடயம் தொடர்பாக பல நகரசபை உறுப்பினர்களுக்கு தெரியாது எனவும் கூறியுள்ளனர்.