முள் படுக்கையில் ஆக்ரோஷ அருள் வாக்கு.. பரபரப்பை ஏற்படுத்தும் பெண் சாமியார்!!

444

தமிழகத்தில்..

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் முள் படுக்கையில் படுத்து அருள்வாக்கு கூறிய பெண் சாமியாரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுவாக எம்மில் சிலருக்கு மட்டுமே சாமி ஆடி அருள்வாக்கு சொல்லக்கூடிய சக்தி இருக்கும்.

அந்தவகையில் இந்தியாவில் முள்படுக்கையில் சாமி ஆடும் பெண் சாமியாரை காண ஏராளமான மக்கள் படையெடுத்துச் செல்கின்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தல் கிராமத்தில் பூங்காவன முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை விழா சிறப்பாக நடைபெறுவதுண்டு. இக்கோயிலில் நிர்வாகியாக நாகராணி அம்மையார் இருக்கிறார்.

இவர் 48 நாட்கள் விரதம் இருந்து விரதத்தின் இறுதி நாளன்று முள் படுக்கை மீது நின்று கொண்டு, ஆடியபடியும், முள் படுக்கையில் படுத்தும் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுவது வழக்கம்.

விரத இறுதிநாளன்று கோவிலின் முன்புறம் உடைமுள், இலந்தை முள், கற்றாழை முள் போன்றவற்றை வைத்து 7 அடி உயரத்திற்குமுள் படுக்கை அமைக்கப்பட்டு முள்படுக்கைக்கு கற்பூரம் ஏற்றி தீப ஆராதனைகள் செய்து அருள்வாக்கு கேட்பது வழக்கம்.

பின்னர் அங்கு இருக்கும் பெண்கள் அருள் வந்து சாமி ஆடி முள் படுக்கையில் இருந்து கீழே இறங்கி வந்த நாகராணி அம்மையாருக்கு அபிஷேகம் நடைபெறும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பூஜைக்கு மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.